லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என மத்திய அமைச்சர்
அமித்ஷா தெரிவித்துள்ளார். தினசரி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், அனைத்து கட்சிகளுக்குமே (அதிமுக உட்பட) கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அதிமுக கூட்டணி தொடர்பாகவும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். நாட்டில் யாரும் கட்சியை (நடிகர்
விஜய்) தொடங்கலாம். எந்த கட்சியிலும் சேரலாம். அதே நேரத்தில் யாருக்கு வாக்குகள் என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றார்.