இறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றில் புரதச்சத்து அதிகம் உள்ளது. அந்த அளவு புரதச்சத்தை சைவ உணவு விரும்பிகள் பழங்கள் மூலம் பெறலாம். அவகோடா பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பொட்டாசியத்துடன் புரதம் நிறைந்துள்ளது. பாலிஃபீனால்கள் நிரம்பிய மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம். இவற்றில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. கொய்யா, கிவி பழங்களில் கால்சியம், இரும்பு ஆகியவற்றுடன் அத்தியாவசிய புரதங்களும் உள்ளன.