மாரடைப்பால் பாதிக்கப்படுகிறவர்கள் சில நேரங்களில் அதை உணர்வதில்லை. 5-ல் 1 மாரடைப்பு கவனிக்கப்படாமல் போகிறது. புறக்கணிக்கக் கூடாத சில அறிகுறிகள்: மார்பில் அழுத்தம் அல்லது அழுத்துவது போல உணர்வு. இதயத்துக்கு ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் போதுமான அளவு வழங்கப்படாததால் மார்பு வலி அல்லது மார்பு அசவுகரியம் ஏற்படுகிறது. கை, முதுகு, கழுத்து, தாடை, வயிற்றில் ஏற்படும் வலி. குமட்டல், வியர்வை போன்றவையும் மாரடைப்பு தொடர்புடையதாக இருக்கலாம்.