நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியானது கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி நிகழ்வு ஒன்றில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, பார்த்து ஓட்டு போங்க. நல்லா சிந்தித்து ஓட்டு போடுங்க. நம்ம ஊர்ல ஒரு பிரச்சினை, நம்ம காலேஜ்ல ஒரு பிரச்சினை, நம்ம நண்பனுக்கு, நம்ம மாநிலத்துக்கு ஒரு பிரச்சினைன்னு சொல்றவங்க கூட சேருங்க. ஆனால் நம்ம சாதிக்கொரு பிரச்சினை, மதத்துக்கு ஒரு பிரச்சினைன்னு சொல்றவங்களுக்கு ஓட்டு போடாதீங்க என கூறியுள்ளார்.