டெல்லியை சேர்ந்த 23 வயது இளைஞர் துஷார் சிங் பிஷ்ட், தன்னை அமெரிக்க மாடல் எனவும், திருமணம் செய்ய பெண் தேடி இந்தியா வந்ததாக கூறியும் டேட்டிங் ஆப்-ல் பல பெண்களை தனது வலையில் வீழ்த்தியுள்ளார். இதனை நம்பிய பெண்களிடம் நிர்வாண புகைப்படங்களை கேட்டு வாங்கும் இவர், அதனை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில், டெல்லியை சேர்ந்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் துஷார் சிங் கைது செய்யப்பட்ட நிலையில், சுமார் 700 பெண்களை அவர் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.