தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டையைச் சேர்ந்த கிராந்தி குமார் பணிகேரா என்பவர் இத்தாலியின் லோ ஷோ டீ ரெக்கார்ட் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்றார். அங்கு, சுழலும் 57 மின் விசிறிகளை 1 நிமிடத்துக்குள் நாக்கால் தடுத்து நிறுத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவர் இந்த உலக சாதனையை படைக்கும்போது அந்த ஷோவில் இருந்த ஜட்ஜ்கள் உட்பட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். கிராந்தி குமார் பணிகேரவின் இந்த சாதனை அவரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது.