பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் இன்று (ஜன. 20) சந்திக்க உள்ளார். அங்கு வருகை தந்துள்ள கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம், விஜய் மக்களை சந்திப்பதற்கு இவ்வளவு பிரம்மாண்டம் மற்றும் கெடுபிடி தேவையா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து புஸ்ஸி ஆனந்தின் முகம் சற்று மாறியது. தொடர்ந்து சுதாரித்து கொண்ட அவர் இது பற்றி நீங்கள் போலீசிடம் கேளுங்கள் என்றார்.