இந்தியாவில் முதல்முறையாக துணை முதல்வராக பதவி வகித்தவர் பீகாரை சேர்ந்த அனுக்ராஹ் நாராயணன் சின்ஹா ஆவார். 1937-1939, 1946-1952 வரை பீகாரின் துணை முதல்வராக பதவி வகித்திருக்கிறார். மேலும் ஆந்திராவில் நீலம் சஞ்சீவரெட்டி, மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சாரியா, கர்நாடகத்தில் சித்தராமையா, எடியூரப்பா, பீகாரில் சுசில் குமார் மோடி, தமிழகத்தில் ஸ்டாலின், ஓபிஎஸ் என பல தலைவர்கள் துணை முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர்.