ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

60பார்த்தது
ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2024 மக்களவை தேர்தலின் போது ராகுல் காந்தி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கையில் ரூ.55 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும் வங்கிகளில் ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 157 சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதுதவிர பங்கு சந்தையில் ரூ.4 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரத்து 519 உள்ளதாகவும், Mutual fund வழியாக ரூ. 3 கோடியோ 81 லட்சத்து 33 ஆயிரத்து 572 உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் சில சொத்துகளை சேர்த்து மொத்தமாக ரூ.9 கோடியே 24 லட்சத்து 59 ஆயிரத்து 264 மதிப்பிலான அசையும் சொத்து ராகுல் காந்தியிடம் உள்ளது. இதனுடன் ரூ.11 கோடியோ 15 லட்சத்து 2 ஆயிரத்து 598 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.

தொடர்புடைய செய்தி