மனிதர்களின் அசுர வளர்ச்சி காரணமாக சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகின்றன. 60%-க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவி இனங்கள் அழிந்து விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழர்கள் வீட்டுக்குள் சிட்டுக்குருவி வருவது நல்லது எனக் கருதினர். சிட்டுக்குருவிகள் வந்து தங்கும் வீடு வாழையடி வாழையாக தழைக்கும் என அவர்கள் நம்பினர். சிறு உயிர் என்றாலும் அதை வாழ வைப்பவர்களின் வாழ்க்கை வசந்தமாக இருக்கும் என்பதை முன்னோர்கள் நமக்கு சுட்டிக்காட்டி சென்றுள்ளனர்.