பலருக்கு வருமான வரிக் கணக்குத் தாக்கலில் டிசிஎஸ் (TCS) திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டுக்கு கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்காக அனுப்பப்படும் தொகைக்கு டிசிஎஸ் பிடிக்கப்படும். இவ்வாறு பிடிக்கப்படும் டிசிஎஸ் தொகையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை டிசிஎஸ் எதுவும் பிடித்தம் செய்யப்படாது. ரூ.7 லட்சத்துக்கு மேல் 5% டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இதை வரிக் கணக்குத் தாக்கல் செய்து ரீஃபண்ட் பெறலாம்.