இந்த குறிப்பிட்ட நேரங்களில் மக்கள் வெளியே வரவேண்டாம்!

88486பார்த்தது
இந்த குறிப்பிட்ட நேரங்களில் மக்கள் வெளியே வரவேண்டாம்!
தமிழ்நாட்டில் கோடைக்கால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், காலை 11 முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. வீட்டை விட்டு வெளியே வருவோருக்கு, இதய பாதிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் நண்பகல் வேளையில் வெயிலில் வருவதை தவிர்க்க வேண்டும். மருத்துவ உதவி தேவைப்பட்டால் 108, 104 எண்களை தொடர்புகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி