பாதாளசெம்பு முருகனுக்கு வெளிமாநில பக்தர் காணிக்கை

58பார்த்தது
பாதாளசெம்பு முருகனுக்கு வெளிமாநில பக்தர் காணிக்கை
திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். அந்த வகையில், நேற்று (ஜுன் 9) பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்ற, பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு வருகை தந்து முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

பாதாள செம்பு முருகன் கோவிலில் எந்த வித கட்டணம் இல்லாமல் சாமி தரிசனம், உண்டியல் இல்லை, தட்டில் பணம் வாங்குவது இல்லை, பார்கிங், குளிக்கும் இடம் அனைத்தும் இலவசம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வெளிமாநில பக்தர்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி