ஜுன் 1ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

77பார்த்தது
ஜுன் 1ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி ஜூன் 1ஆம் தேதி, கட்சி மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று (மே 28) வெளியான அழைப்பு கடிதத்தில், ஜுன் 1ஆம் தேதி காலை 11 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடக்கும் கூட்டத்தில் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்க உள்ளார். இதில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி