கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ரயில் நிலையத்தில் இருக்கும் பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்கள் மட்டும் திமுகவினர் மை பூசி அழித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக திமுவைச் சேர்ந்த 5 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், திமுகவினர் இந்தி எழுத்துக்களை அழித்த 3 மணி நேரத்தில், மீண்டும் இந்தியில் பெயர் எழுதப்பட்ட சம்பவம் திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.