கேரளா: கோழிக்கோடு தாமரசேரி மலைப்பாதையின் 9வது கொண்டை ஊசி வளைவில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார். வடகரையைச் சேர்ந்த அமல் (23) என்பவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் சக ஊழியர்களுடன் வயநாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக மலைப்பாதையில் நின்றிருந்தபோது தவறி 60 அடி ஆழத்தில் விழுந்தார். தீயணைப்புத்துறையினர் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.