ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள வாரச்சந்தையில் கடைகளை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நாற்காலிகளை கொண்டு தாக்கியதில் மண்டை உடைக்கப்பட்டதால் அந்த இடம் கலவரம் போல் காட்சியளித்தது. மேலும், தடுக்க வந்த காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதில் ஒருவருக்கு காயம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.