கழுத்தில் வாசனை திரவியத்தை அடிப்பதன் மூலம் அங்குள்ள சருமம் கருமையாகிவிடும் அல்லது தோல் அரிப்பு, சொரி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாசனை திரவியங்களில் பெர்கமோட் எண்ணெய், எலுமிச்சை எண்ணெய் மற்றும் திராட்சை விதை எண்ணெய் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இவை சூரிய ஒளியுடன் வினை புரிந்து பைட்டோபோடோடெர்மாடிடிஸ் என்ற தோல் பிரச்சனைகள் ஏற்படலாம் என தெரிவிக்கின்றனர்.