சுயஉதவிக்குழுவினர் வாக்காளர் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி

65பார்த்தது
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் வாக்காளர் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், "இந்தியக் குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டு, நமது நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலின் கண்ணியத்தையும் நிலைநிறுத்தவும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி, மதத்தின் தாக்கம் இல்லாமல் வாக்களிப்போம்” என வாக்காளர் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர்.

அனைவரும் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் வாக்களிக்க செய்து, 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்திட ஒத்துழைப்பு அளித்து ஜனநாயகத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பேசினார்.

தொடர்புடைய செய்தி