மைசூரில் இருந்து சென்னை வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண்ணின் பையை திருடிய காவலர் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பத்தூர் அருகே ரயில் வந்துகொண்டிருந்தபோது பெண்னின் கைப்பை ரயிலின் இருக்கைக்கு கீழே விழுந்தபோது, அதை திருடிய காவலர் வசந்தகுமார், தனது பையில் மறைத்து வைத்துள்ளார். விசாரணையில் பை பார்க்க அழகாக இருந்ததால் திருடியதாக கூறியுள்ளார்.