முதல்வர் மருந்தகம் திட்டத்தை கைவிடுக - டிடிவி தினகரன்

62பார்த்தது
முதல்வர் மருந்தகம் திட்டத்தை கைவிடுக - டிடிவி தினகரன்
முதல்வர் மருந்தகங்களை கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே இயங்கி வரும் கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தக செலவுகளை சமாளிக்க முடியாமல் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில், முதல்வர் மருந்தகங்களை திறப்பது கூட்டுறவு நிறுவனங்களை முற்றிலுமாக முடக்கச் செய்யும் செயலாகும். அம்மா மருந்தகங்களுக்கு மூடுவிழா நடத்தும் முடிவோடு கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி