மணப்பாறை கொத்தம்பட்டியை சேர்ந்த நர்ஸ் ஃபிலோமினா வயது 22 என்பவரும் கோட்டூரை சேர்ந்த டிரைவர் அடைக்கலராஜ் வயது 30 என்பவரும் காதலித்து வந்தனர். இதற்கு காதலன் வீட்டில் ஆதரவும், காதலி வீட்டில் எதிர்ப்பும் கிளம்பியது.
இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த நிலையில், பாதுகாப்புக் கேட்டு வேடசந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருதரப்பு பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி எஸ்.ஐ. ஜெயலட்சுமி காதல் ஜோடியை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தார்.