தெரு நாய்களிடம் இருந்து மீட்கப்பட்ட புள்ளி மான்

79பார்த்தது
தெரு நாய்களிடம் இருந்து மீட்கப்பட்ட புள்ளி மான்
வேடசந்தூர் அருகேயுள்ள சேனங்கோட்டையில் முருங்கைக்காய் பதப்படுத்தப்படும் கிடங்கு முன்பாக நேற்று காலை தெருநாய்கள் கூடி ஏதோ ஒன்றை கடித்து கொண்டிருந்தது. இதை அவ்வழியே சென்ற வாகனஓட்டிகள் கண்டு அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது தெருநாய்கள் புள்ளிமான் ஒன்றை கடித்து கொண்டிருந்தது. இதையடுத்து வாகனஓட்டிகள் தெரு நாய்களை விரட்டியடித்து புள்ளிமானை மீட்டு, அய்யலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் வருவதற்குள் புள்ளிமான் வனத்திற்குள் ஓடி விட்டது. வனத்துறையினர் தெரு நாய்களிடம் கடி வாங்கி தப்பிய புள்ளிமானை சிகிச்சை அளிப்பதற்காக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி