ரத்தசோகை இல்லாத கிராமங்களை உருவாக்க ஊட்டச்சத்து உணவுதிருவிழா

51பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற ரத்தசோகை இல்லாத கிராமங்களை உருவாக்குவதற்கான ஊட்டச்சத்து உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் 306 ஊராட்சிகளில் மற்றும் 14 வட்டாரங்களில் சுய உதவி குழுவினர்களை கொண்டு ரத்தசோகை இல்லாத கிராமங்களை உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் அந்தந்த வட்டரங்களில் ஊராட்சிகளில் வெற்றி பெற்ற உதவி குழுவினரை கொண்டு 14 வட்டாரங்களிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்ற சுய உதவிக் குழுவினர்களை கொண்டு மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு திருவிழாவில், பாரம்பரிய உணவுகளை தயாரித்து, அவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஊட்டச்சத்து உணவு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, உதவித் திட்ட அலுவலர்கள் ராம்குமார், ஜீவ ரம்யா, வெற்றிச்செல்வன், பிரியங்கா உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி