பத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஆட்சியரிடம் புகார் மனு

61பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன். முருகன் மல்லிகா. பாலு. சேகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதே பகுதியில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வாழ்ந்து வருவதாகவும் கடந்த நான்கு வருடங்களாக இதே பகுதியைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் கந்தவேல் மற்றும் பழனிவேல் ஆகியோர் அடியார்களுடன் வந்து விவசாயம் செய்யக்கூடாது இந்த நிலம் எங்களுக்கு சொந்தமான நிலம் என்று கூறி தொடர்ந்து மிரட்டுவதாகும் அதேபோல் அடிப்பதாகவும் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கட்சியை சேர்ந்தவர்கள் எனக்கூறி அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் இதனால் தொடர்ந்து எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை நிம்மதியாகவும் இருக்க முடியவில்லை தொடர்ந்து எங்களை அடியார்களை கொண்டு தாக்குகின்றனர் விவசாயமும் பொய்த்து போய்விட்டது ஆகவே மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மீண்டும் நாங்கள் விவசாயம் செய்வதற்கு வழி வைக்க வேண்டும் என கூறி புகார் மனு வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி