தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனம் ஈர்த்திடும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டக்கிளை துணைத் தலைவர் துரைராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி ஆர்ப்பாட்டம் விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அலுவலர் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டின் வாழ்த்துரை வழங்கினார். வட்டக்கிளை செயலாளர் ராஜாமணி நன்றியுரை வழங்கினார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும், 21 மாத கால நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட கோரியும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி