திண்டுக்கல் பெரிய கோட்டை ஊராட்சி நடுப்பட்டி கிராமத்தில் கிஷோர் என்ற 11 வயது சிறுவன் சனிக்கிழமை காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த நிலையில் நேற்று மூளைச்சாவு அடைந்தார். இதனை அடுத்து அவரது உடல் உறுப்பை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன் வந்தனர். இதனை அடுத்து சிறுவனின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த சிறுவனின் தோல் தானமாக வழங்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பாக நடமாடும் மருத்துவமனை வாகனம் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு 2 மருத்துவர்கள் 7 மருத்துவக் குழுக்கள் 20 கொசு தடுப்பு துறை அதிகாரிகள், 14 தூய்மை பணியாளர்கள் ஆகியோர் வீடு வீடாக சென்று காய்ச்சல் உடல் வலி போன்ற அறிகுறிகள் எதுவும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்
இதன்படி, 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று மருத்துவ குழுவினர் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கொசு ஒழிப்பு சார்பாக வீட்டில் பிடித்து வைத்திருக்கும் தண்ணீர்களுக்கு மருந்து ஊத்துதல் மற்றும் கொசு மருந்து அடித்தல் போன்ற பணிகளில் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
ஊராட்சி சார்பாக தூய்மை பணியாளர்கள் 14 பேர் ஊராட்சி முழுவதும் குப்பைகள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.