பழனிமுருகன்கோவில் உண்டியல் வரவு ரூ. 5. 50 கோடியை தாண்டியது

51பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் திருக்கோயில் உண்டியல்கள் நிறைந்ததைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 5 கோடியே 50 இலட்சத்து 94 ஆயிரத்து 743 கிடைத்துள்ளது. தங்கம் 1547 கிராமும், வெள்ளி 31ஆயிரத்து 094கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1, 207 ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையில் பழனியாண்டவர் கல்லூரி மாணவியர், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர்கள் என பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி