திண்டுக்கல் மாவட்டம்
பழனி தாலுகா அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பழனி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் காளீஸ்வரி தலைமை தாங்கினார். செயலாளர் தங்கவேல், பொருளாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான எந்த ஒரு நலத்திட்டங்கள் இல்லை எனக் கூறி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.