பழனி சண்முக நதி அருகே அரசு பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஆனால், நல்வாய்ப்பாக இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். இதை அடுத்து பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.