திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் உணவு பாதுகாப்பு துறை காவல் துறையினர் இணைந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பழனி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணன் , சார்பு ஆய்வாளர் தலைமையில் பழனி சண்முக நதி, நெய்காரபட்டி, வி. கே. மில்ஸ், கரடிகூட்டம், காவலப்பட்டி, ஆகிய கடைகளை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என 50க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 9கடைகளில் குட்கா பொருட்களை கைப்பற்றி 9 கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூபாய் 25000விதம் அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது மேலும் 9கடைகளை பூட்டி சீல் வைத்து காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்