இளநீர் பலவிதமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. இளநீரில் இருக்கும் அதிக அளவிலான பொட்டாசியம் சிறுநீரகப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் பொட்டாசியம் கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறையில் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான பொட்டாசியம் சேர்ப்பது 'ஹைப்பர்கலேமியா' என்று அழைக்கப்படும் ஒரு தீவிர நிலைக்கு வழிவகுக்கலாம்.