அம்பேத்கர் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், மாநிலங்களவையில் நான் பேசியதை கடந்த 48 மணி நேரமாக காங்கிரஸ் திரித்து கூறி வருகிறது. அம்பேத்கர் விவகாரத்தில் உண்மையை மறைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து குறை சொல்கிறார்கள். இந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் காங்கிரஸ் கருத்து தெரிவித்து வருகிறது என கூறியுள்ளார்.