திருநெல்வேலி: இருக்கன்துறை கல்குவாரியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்னதாக, தனியார் கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, மீட்பு பணிகள் நடந்து வந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அருள்குமார் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த ஜேசிபி ஓட்டுநர் ராஜேஷ், நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு தொழிலாளி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.