ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் பாதியில் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளது தவறான முடிவு என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ளன. இதேபோன்று தான் தோனியும் 2014-15 பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து பாதியில் வெளியேறினார். எதுவாக இருந்தாலும் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக இருந்திருக்கிறார் என கவாஸ்கர் தெரிவித்தார்.