திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி தக்காளி மார்க்கெட் அருகே நகராட்சி குப்பை கிடங்கில் இன்று தற்போது நெருப்பு பற்றி எரிகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மேகம் போல் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் புகை மூட்டமாக காணப்படுவதால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது இதை உடனடியாக அதிகாரிகள் தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றன