பழனி அருகே ஆயக்குடியில்
ஆயை காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அறக்கட்டளை சார்பில் ஆயக்குடி பேரூராட்சியில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆயக்குடி அனைத்து சமூக மக்களுக்கும் சமூக நல்லிணக்க இப்தார் மற்றும் ரமலான் அன்பளிப்பாக வேஷ்டி, மற்றும் சேலைகள் பணியாளர்களுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் வழிபாடு நடத்தப்பட்டு புதிய உடைகள் மற்றும் இனிப்புகளை அறக்கட்டளை நிறுவன தலைவர் டாக்கர். அஜ்மத் அலி வழங்கினார்.
முன்னதாக இப்தார் நோன்பு வழங்கப்பட்டு அப்பகுதி 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உடைகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் செயலாளர் மன்சூர்உசைன், ரசித்தா, முகமது முஸ்தபா, அப்துல்லா, ஹபிப்ரகுமான், தாஜுதீன்,
கஜினி முகமது,
சபீக்அகமது,
அஜ்மத் அலி என்ற சின்னவர்,
சாதிக் பாஷா, கவிஞர் வைரபாரதி, ஜெகநாதன்,
அகமது நிஜாம், லெப்பை சையது, மற்றும் பேரூராட்சி அதிகாரிகளான தலைமை எழுத்தர் சுசீலா,
துப்புரவு ஆய்வாளர் சரவணப் பாண்டியன், துப்புரவு மேற்பார்வையாளர் செங்குட்டுவன், கிளர்க் ஜெகதீஸ்வரன், வரித்தண்டலர்
ராஜா மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆயை காயிதே மில்லத் சிறுபான்மையினர் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் 400க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கப்பட்ட நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.