கோயிலில் இறைவனை தரிசனம் செய்த பிறகு பிரசாதமாக விபூதி கொடுக்கப்படுகிறது. விபூதி என்னும் சொல்லுக்கு மகிமை என்று பொருள். விபூதியை உச்சியில் தரிப்பதன் மூலமாக பாவம் நீங்குமெனவும், நெற்றியில் தரிக்கும்பொழுது நான்முகனால் எழுதப்பட்ட கெட்ட எழுத்துகளின் தோஷம் நீங்குமெனவும், மார்பில் தரிக்கும்பொழுது மனதினால் செய்த குற்றம் விலகுமென ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. விபூதியை இடது கையால் வாங்கவோ பூசவோ கூடாது.