திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் போடுவார் பட்டி ஊராட்சி கெங்கு வட்டி கிராமத்தில் சண்முகம் என்பவர் பல ஆண்டுகளாக ஆடு மேய்த்து வருகிறார் இவர் தினமும் ஆடு மாடுகளை மேச்சலுக்கு அழைத்து செல்வதும் வழக்கமாக கொண்டிருந்தார் இவர் நேற்று ஆடு மேச்சலுக்கு அழைத்துச் சென்று விட்ட பின் பட்டியில் அடித்து வீட்டுக்குச் சென்றிருந்தார் மீண்டும் காலை வழக்கம் போல் ஆடுகளை மேச்சலுக்கு அழைத்துச் செல்வதற்காக வந்து பார்த்தபோது ஆடுகள் பலியானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இவருடைய ஆட்டு மந்தையில் புகுந்த வெறிநாய்கள் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 பட்னா ஆடுகளை கடித்து குதறிய நிலையில் 25 ஆடுகளும் பலியானது.
எனவே கிராம நிர்வாக அதிகாரி ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.