தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க தலைவர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் ஆகியோர்
தலைமையிலான விவசாயிகள் திண்டுக்கல் பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஒட்டன்சத்திரம் பகுதியில்
ஏராளமானோர் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். ஒரு ஆண்டாக வீரியம் இல்லாத முட்டை, தரம் இல்லாத
இளம்புழுக்கள் காரணமாக புழு வளர்ப்பில் நோய் தாக்குதல்கள் ஏற்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக இழப்பீடு
வேண்டி விண்ணப்பம் செய்தேன். 5 மாதங்களுக்கு பிறகு என் வங்கி கணக்கில் ரூ. 4900 வரவு வைக்கப்பட்டது. துறை அறிவித்துள்ள
காப்பீட்டு அடிப்படையில் கூட இழப்பீடுகள் விவசாயிகளுக்கு வழங்கவில்லை. அதிகாரிகள் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை
எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.