போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து எஸ்.பி., ஆய்வு

56பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள ஆண்டு முழுவதும் வருகை தருகின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு இயற்கைகளில் காட்சிகளை கண்டு ரசித்தும் செல்கின்றனர்.

இந்த நிலையில் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொது மக்களும்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக கொடைக்கானல் நகர் பகுதிகளாக இருக்கும் அண்ணா சாலை, ஏரி சாலை, பாம்பார் புரம் சாலை, அப்சர்வேட்டரி பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் இடையே ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சிவராம், காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், வணிகர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி