ஒட்டன்சத்திரம் தாலுகா இடையகோட்டையில் கடந்த 2022 ஆம் ஆண்டு, சுமார் 6 மணி நேரத்தில் 117 ஏக்கரில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதனை உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில் தொடங்கி வைத்தார். இந்தநிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் அடர்வனக்காடு வளர்ச்சியினை ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்து அதனை வெளியிட்டுள்ளார்.