திண்டுக்கல்: ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

55பார்த்தது
திண்டுக்கல் ஆர்.வி.எஸ் பொறியியல் கல்லூரி திருமண மண்டபத்தில் 35 வது பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக்கழக பதிவாளர் ராதாகிருஷ்ணன், கல்லூரி செயல் அலுவலர் வேணுகோபால் முருகதாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பட்டங்கள் வழங்கி பாராட்டினர்.

கடந்த 2022-23 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற முதுநிலை மற்றும் இளநிலை பொறியியல் படிப்பு முடித்த மாணவ மாணவிகள் 300 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில் பல்கலைக்கழக அளவில் தர வரிசை பட்டியலில் இடம் பிடித்த 6 மாணவ மாணவியருக்கு நினைவு பரிசு மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார்கள்.

மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், டெக்ஸ்டைல், பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர் என பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி