சின்னாளபட்டி: ஸ்ரீ விஸ்வகர்மா சிலை பிரதிஷ்டை விழா

79பார்த்தது
சின்னாளபட்டி ஸ்ரீ அக்கசாலை சித்திவிநாயகர் கோவிலில் ஸ்ரீ விஸ்வகர்மா சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக விஸ்வகர்மா சிலை மேலதாளம் முழங்க பிரதிஷ்டை செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி கடைவீதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீஅக்கசாலை சித்திவிநாயகர் திருக்கோவில். பழம்பெருமை வாய்ந்த இந்த கோயில் விஸ்வகர்மா சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்டதாகும். இக் கோவிலில் ஸ்ரீவிஸ்வகர்மா சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு வியாழன் கிழமை மாலை 6 மணியளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், இரண்டாம் கால யாக வெள்ளி, மகா தீபாரதனை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை விஸ்வகர்மா பெருமானுக்கு மகா கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமிக்கான யாக சாலை பூஜைகள் மற்றும் சிலை பிரதிஷ்டை பூஜைகளை கிருபாகரன் சிவம், பாபு அர்ச்சகர் செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கடைவீதி ஸ்ரீ அக்கசாலை சித்தி விநாயகர் திருக்கோவில் விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி