திண்டுக்கல் ஜி. டி. என். கல்லூரி மாணவி ஸ்டிக்கா ஜாஸ்மின் , 21. இவர் பல பாக்ஸிங் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். பஞ்சாபில் கடந்த 2021 மற்றும் 2023 நடந்த கால் இறுதி போட்டிகளிலா வெற்றி பெற்று சாதனை படைத்தார். மேலும் பாண்டிச்சேரி மற்றும் டில்லியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்று தங்கம் வென்றார். கிருஷ்ணகிரியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்று தங்கம் வென்றார். கிருஷ்ணகிரியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றார். தொடர்ந்து தங்கம் வென்ற தங்க மங்கையான ஸ்டிக்கா ஜாஸ்மினுக்கு இன்று பாராட்டு விழா திண்டுக்கல் விளையாட்டு வீரர்கள் யூனியன் தலைவர் முகமது சுல்தான் தலைமையில்நடந்தது. தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர், மனிதநேய ஞானகுரு, திண்டுக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால், துளிர் அறக்கட்டளை நிறுவனர் ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவிக்கு பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெல்வது எனது குறிக்கோளாகக் கொண்டுள்ளேன் என்றார் அவர்.