திண்டுக்கல், பழனிரோடு, சக்திதியேட்டர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த ராமசாமி என்பவரிடம் திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த மார்ட்டின்பிரபு வயது 20, டைசன் வயது 20, விக்டர்ஆண்டனி வயது 19, ஆரோக்கியராஜ் ஜெரால்ட் வயது 21 ஆகிய 4 பேர் தாங்கள் பெரிய ரவுடி என்றும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி ராமசாமியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறிக்க முயன்றதாக ராமசாமி அளித்த புகாரின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வாசு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மார்ட்டின்பிரபு, டைசன், விக்டர்ஆண்டனி, ஆரோக்கியராஜ் ஜெரால்ட் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.