உடலில் இருக்கும் புரதம் சிறுநீர் வழியாக வெளியேறும் போது அதிக நுரையுடன் வெளியேறும். உடலில் புரதம் குறையும் பொழுது ரத்தக் குழாய்களில் இருந்து நீர் வெளியேறத் தொடங்கும். இதனால் கால் வீக்கம், முகத்தில் வீக்கம் ஏற்படும். பசியின்மை, வாந்தி வரும் உணர்வு, சருமத்தில் அரிப்பு, வறட்சித்தன்மை ஆகியவையும் சிறுநீரகப் பிரச்சனையின் அறிகுறிகள். தண்ணீர் குடிக்கும் அளவை விட அதிகமாக சிறுநீர் வெளியேறுவதும் ஆரம்பநிலை சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.