திண்டுக்கல்லில் உலக சமூக நீதி தினத்தை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. உலக சமூக நீதி தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் சமூகநீதி நல்லிணக்கம் சார்பில் வலுவான ஜனநாயகம் அமைய 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வழக்கறிஞர் பெருமாள் தலைமை வகித்தார். வழக்கறிஞர் தீபா, நிர்வாகிகள் செந்தில், சிவகுமார், ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு ஊர்வலம் திண்டுக்கல் குமரன் பூங்காவில் துவங்கி மெயின் பஜார் வழியாக பெரியார் சிலை அருகே முடிவுற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் 100 சதவீதம் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். என வலியுறுத்தி பதாகை ஏந்தி வந்தனர். நிகழ்ச்சியில், மேகம் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயக்குமார் நன்றி கூறினார்.