கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை.
திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சுற்றுலாத்தலமான இத்தளத்திற்கு தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண்பதற்காகவும் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் தங்கி சீதோசன நிலையை அனுபவிப்பதற்காக தினம்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளும் வார விடுமுறை பண்டிகை காலங்கள் கோடை காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் வருவது வழக்கம்.
சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள பேரிஜம் ஏரிக்கு வனத்துறை அனுமதியுடன் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி வழங்கி வருகின்றனர் கடந்த சில மாதங்களாகவே பேரிஜம் ஏரி பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது இதனால் யானை நடமாட்டம் அதிகம் உள்ள போது சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிப்பது கிடையாது.
புதன்கிழமை காலை 9 மணி அளவில் பேரிஜம் ஏரி பகுதியில் யானை நடமாட்டம் அதிகம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை தடை விதித்து உள்ளது.