இணைய குற்றப் பிரிவு போலீஸாருக்கு பரிந்துரை

77பார்த்தது
இணைய குற்றப் பிரிவு போலீஸாருக்கு பரிந்துரை
கொடைரோடு அருகே தண்டவாளத்தில் சிமென்ட் கற்கள் வைக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க இணைய குற்றப் பிரிவு போலீஸாருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

நாகா்கோவிலிலிருந்து சென்னை தாம்பரம் வரை இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில், கடந்த 11-ஆம் தேதி இரவு திண்டுக்கல் நோக்கி வந்தபோது, கொடைரோடு அருகே தண்டவாளத்தில் சிமென்ட் கற்கள் கிடந்தன. இதனால் ரயிலை நிறுத்திய ஓட்டுநா், அந்த கற்களை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் ரயிலை இயக்கினாா். இதுகுறித்து திண்டுக்கல் ரயில் நிலைய காவல் ஆய்வாளா் தூயமணி வெள்ளைச்சாமி, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சுனில்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். மேலும், சுற்றுப்புற கிராமங்களுக்குச் சென்றும் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி இரவு ரயில் தண்டவாளம் அருகே சுற்றித் திரிந்தவா்கள் பயன்படுத்திய கைப்பேசி சிம்காா்டுகளை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் இணைய குற்றப் பிரிவு போலீஸாரிடம், ரயில்வே காவல் துறையினா் பரிந்துரை செய்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி